ஈழத் தமிழர்களுக்காக எனது பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை: வைரமுத்து

ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து,

ஈழத்து கலை நிகழ்ச்சி இங்கே நடந்த போது, என் கண்களின் ஓரம் ஈரமானது. அங்கு போர் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. களம் ஓய்ந்து விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

அப்பாவி தமிழர்கள், சம உரிமையோடு, அவரவர் நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதத்தில், நான் எனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை.

அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல., கிழக்கு சிவக்கும், மறுபடி உதிக்கும். அதுபோல் ஈழம் பிறக்கும் என்றார்.